சனி, 24 ஜனவரி, 2009

"காஞ்சி"யும் "பாட்ஜி"யும் (1)

<>கொரியச் சிறுவர் கதை<>
<><><><><><><><><><><><><><><><><><><><>
உலகெங்கும் பல நூறு சின்ட்ரெல்லா கதைகள் உலவுகிறது. கொரியாவில் மட்டும் அரைடஜன் சின்ட்ரெல்லா கதைகள் உல‌வினாலும் க‌தை ஒன்று;பாத்திர‌ப் பெய‌ர், ச‌ம்ப‌வ‌ங்க‌ள் ச‌ற்று மாறுப‌ட்டு வ‌ழ‌க்கில் உள்ள‌து. இந்த‌க் கதையில் வ‌ரும் காஞ்ஜியும் பாட்ஜியும் இன்னொரு க‌தையில் வேறொரு பெயர் என்று இருக்கும். ஒன்றில் இள‌வ‌ர‌ச‌ன் ம‌ண‌ப்ப‌தாக‌ வ‌ரும் இன்னொன்றில் மாஜிஸ்ட்ரேட் ம‌ண‌ப்ப‌தாக‌ வ‌ரும். உல‌க‌த்திலுள்ள‌ சின்ட்ரெல்லா கதைகள் குறித்து வ‌ட‌க்கு க‌லிபோர்னியாவில் வ‌சித்துவ‌ரும் ஷர்லி கிளிமோ எழுதியிருக்கிறார். எகிப்து சின்ட்ரெல்லா கதைகள் குறித்து ஸான்பிரான்சிஸ்கோவில் வசிக்கும் ரூத் ஹெல்ல‌ர் அழ‌குற‌ எழுதியிருக்கிறார்.



கொரிய‌ன் சின்ட்ரெல்லா கதைகளை எழுதும் முன் கொரியா சென்று த‌ங்கி அந்த‌க் கதையில் வ‌ரும் கிராம‌ப்புற‌ங்க‌ளுக்குச் சென்று அங்குள்ள‌ வீட‌மைப்பு, வாழ்க்கை முறை போன்ற‌வ‌ற்றையெல்லாம் நுணுக்க‌மாக‌ ஆராய்ச்சி செய்து, தானே, இந்த‌ப் புத்த‌க‌ங்க‌ளுக்கான‌ ப‌ட‌ங்க‌ளை பெயிண்டிங் செய்திருப்ப‌து அவ‌ருடைய‌ ஈடுபாட்டை வெளிப்ப‌டுத்துகிற‌து.
<><><><><><><><><><><><><><><><><><><><>
"காஞ்சி"யும் "பாட்ஜி"யும் (1)



(கொரியச் சிறுவர் கதை)


கொரியா நாட்டில் ஒரு அழகிய கிராமம். அந்தக் கிராமத்தில் "காஞ்சி" தன் பெற்றோருடன் வசித்துவந்தாள்.


காஞ்சி பெற்றோருக்கு ஒரே குழந்தை. காஞ்சியின் தந்தைக்கு கொஞ்சம் விவசாய நிலம் இருந்தது.


கிராமத்தை ஒட்டியுள்ள இடத்திலும், சற்று தூரமான‌ மலையடிவாரத்திலும் என்று இரண்டு விதமான நிலங்கள் இருந்தது.


கிராமத்தை ஒட்டியுள்ள நிலம் வளமான நிலம். காய்கறி, நெல், பழ வகைகள் பயிரிட்டு பராமரித்தனர்.


"காஞ்சி"க்கு காய்கறித் தோட்டத்தை சுற்றிச் சுற்றிவந்து பராமரிப்பாள். தந்தைக்கு மிகவும் உதவியாக


தோட்டத்தில் இருப்பாள். வீட்டிலும் தாய்க்கு உதவியாக வேலை செய்வாள்.


மகிழ்ச்சியாக நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தது. திடீரென்று காஞ்சியின் அம்மா நோயில்


படுத்தபடுக்கையானாள். பார்க்காத வைத்தியம் இல்லை; சாப்பிடாத மருந்தும் இல்லை.


காஞ்சி தன் தாயின் அருகில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள்.


"எப்பவும் அப்பாவுக்கு உதவியாக இருக்க வேண்டும். எல்லோரிடமும் அன்பாயிருக்கவேண்டும்.


மற்றவர்கள் அன்பு செலுத்தவில்லையென்றாலும் நாம் அன்பு செலுத்த வேண்டும்" என்று


காஞ்சியின் அம்மா அவளிடம் பேசியது தான் கடைசி இரவு.


அம்மாவின் இழப்பு காஞ்சிக்கு பேரிழப்பு. அம்மாவின் நினைவுகளில் இருந்து மீளமுடியாமல்


தவித்தாள், காஞ்சி. காஞ்சி சோர்ந்த நேரங்களில் அவளின் அப்பா ஆறுதல் சொல்லி தேற்றினார்.


காலம் செல்லச் செல்ல காஞ்சி மெல்ல மெல்ல அம்மா குறித்த கவலைகளை மறந்தாள்.


அப்பா எல்லாமுமாக அவளுக்கு இருந்ததுவும் ஒரு காரணம். காஞ்சி இப்போதெல்லாம் தானே சமைக்கக் கற்றுக்கொண்டாள்.


காலையில் அப்பா வயலுக்கு சென்றுவிடுவார். காஞ்சி சமைத்து அப்பாவுக்கு எடுத்துப் போவாள்.


இப்படியாக நாட்கள் இன்பமாய் போய்க்கொண்டிருந்த ஒருநாள் காஞ்சியைக் கூப்பிட்டார்,அப்பா.


கள்ள‌ம் க‌ப‌ட‌மில்லாத‌ காஞ்சி, அப்பா கூப்பிட்ட‌ அடுத்த‌ நொடியில் வ‌ந்து நின்றாள்; அப்பா சொல்ல‌ப்


போவது அவளுடைய மகிழ்ச்சியை சீர் குலைக்கும் என்பது அப்போது காஞ்சிக்குத் தெரிய‌வில்லை.


இன்னும் வ‌ரும்....!


தமிழில் வழங்குபவர்: ஆல்பர்ட் ஃபெர்னான்டோ,விஸ்கான்சின், அமெரிக்கா.
_______________________________________________________________

"1989ல் ஐ.நா.பொதுச் ச‌பையான‌து சிறார்க‌ள் உரிமை குறித்த மாநாடு ஒன்றை ந‌ட‌த்திய‌து.



உல‌க‌ச் சிறார்க‌ள் உரிமைக‌ள் இந்த‌ மாநாட்டில் வ‌ரைய‌றுக்க‌ப்ப‌ட்ட‌து. சிறார் உரிமைக‌ளாக‌ சுகாதார‌ம், க‌ல்வி,வ‌சிக்க‌ப் போதுமான‌ த‌ர‌ நிலை,ஓய்வு, விளையாட்டு இப்ப‌டி ப‌ல்வேறு நிலைக‌ளில் இவ‌ர்க‌ளுக்கான‌ உரிமைக‌ள் க‌ட்ட‌மைக்க‌ப்ப‌ட்ட‌து. இதில் பல்வேறு நாடுகளின் பங்களிப்பாக சிறார் உரிமைகள் குறித்து அளிக்கப்பட்டதை தொகுத்து உலகளாவிய குழந்தைகள் உரிமைகளாக 66 உரிமைகளை வெளியிட்டது.அனைத்தையும் கார்ட்டூன்களாகப் பார்க்கச் சுட்டுக இங்கே: -http://www.unicef.org/crcartoons/
சிறார் உரிமைகள் குறித்த மாநாடு நடந்த 15ம் ஆண்டின் நினைவாக 2004ம் ஆண்டு ந‌வ‌ம்ப‌ர் 19ல் யுனிசெஃப் குழ‌ந்தைக‌ள் உரிமைக‌ளுக்கான‌ டாப் 10 கார்ட்டூன்களை http://www.unicef.org/videoaudio/video_top_cartoons.html
 வெளியிட்ட‌து. இதை சில நாடுகள் காணொளிச் சித்திரங்களாக‌ வழங்கி குழந்தைகளை மகிழ்விக்கிறது."பாகுப‌டுத்த‌ப்ப‌டுத‌லிலிருந்து சுத‌ந்திர‌ம் பெறுவ‌த‌ற்கு குழ‌ந்தைக‌ளுக்கு உரிமை" என்ற‌ த‌லைப்பிற்கான‌ கார்ட்டூன் இது!" (pic.enclosed)


"குழந்தைத் தொழிலாளர்களாக ஆக்கப்படுவதிலிருந்து விடுதலை, யுத்தத்திலிருந்து பாதுகாப்பு பெறும் உரிமை, கல்விபெறும் உரிமை, குழந்தைகள் தங்கஆள் சொந்தக் கலாச்சாரத்தை அறிந்துகொள்ளவும் அந்தக்கலாச்சாரத்தின்படி வசிக்கும் உரிமை போன்றவைகள் குறிப்பிடத்தக்கது.
________________________________________________________________________

கொரிய‌ச் சிறுவ‌ர் க‌தை


"காஞ்சி"யும் "பாட்ஜி"யும்

முன்னுரையாக‌



என்னுரை.....!
 
குழந்தைகளுக்கான கதை எழுத என்னுள் தீவிரம் கொழுந்துவிட்டபோது



கூடவே முளைத்த எண்ணங்கள் எனக்குள் சில புரிதல்களை பிரசவித்தது.


நம்பும்படியான கதைகளைச் சொல்வதா? நம்ப இயலாத கற்பனை


வினோதங்களை விதைப்பதா? எனக்குள் ஒரு போர்க்களமே
உருவானது.எதிரும் புதிருமாக என்மனமே நின்று
விவாதங்கள் செய்தது.
 
கள்ளம் கபடம் இல்லாத குழந்தைகள் எண்ணங்கள் விரியவேண்டும். கற்பனைகள் கொடிகட்டிப் பறக்கவேண்டும்;


புதிதுபுதிதான கற்றலில் ஈட்படவேண்டும்.


குழந்தைகள் க‌ண்டுபிடிப்பாள‌ர்க‌ளாக‌ ப‌ரிண‌மிக்க‌ வேண்டும்;
குழ‌ந்தைக‌ள் என்ற‌ எல்லைக்கோட்டைத் தாண்டிக் க‌ட‌ப்ப‌தாக‌ இருக்க‌வேண்டும்.


அவ‌ர்க‌ளுக்குள் கொட்டிக்கிட‌க்கும் ஆற்ற‌ல்க‌ள் ஆர்ப்ப‌ரித்துக்கிள‌ம்ப‌வேண்டும்; மின்னல்


கீற்றுக‌ளாய் குழ‌ந்தைக‌ள் பூமியில் வேர் பாய்ச்ச‌வேண்டும்!


இப்ப‌டியெல்லாம் நிக‌ழ‌ குழ‌ந்தைக‌ள் த‌ங்க‌ள் க‌ற்ப‌னைச் சிற‌குக‌ளை விரிக்க‌ வேண்டும்.


ந‌ம்பும் ந‌ம்பிக்கைகளை விதைக்க‌ வேண்டும்; ந‌ம்ப‌முடியாத‌ க‌ற்ப‌னைக‌ளையும் பூந்தூவ‌லாக‌ப் பொழிய‌வேண்டும். அப்போதுதான் அவ‌ர்க‌ளின் எண்ண‌ச் சிற‌குக‌ள்


வான‌ப்பெரிதாக‌ வ‌ள‌ரும்! சூரிய‌னையே சுட்டெரிக்கும் க‌திர்களாக‌ விரியும்.


இதை


குழ‌ந்தைக‌ளிடையே வ‌ள‌ர்த்தெடுக்க‌ வேண்டுமான‌ல் குழ‌ந்தைக‌ளுக்கான‌ ப‌ங்க‌ளிப்புச் செய்ய‌வேண்டும் என்ற‌ என் உள் ம‌ன‌ ஓசைக்கு வ‌டிவ‌ம் கொடுக்க‌ எண்ணினேன்.


அந்த‌ நொடிப்பொழுதில் என் ம‌ன‌தில் எஞ்சி நின்ற‌தும், விஞ்சி நின்ற‌‌தும் இதுதான்:-
 
சிறார்க்கு ந‌ம்பிக்கைச் சிற‌குக‌ளை முளைக்க‌ வைக்கிற‌ அதே நேர‌த்தில் உல‌கின் வெவ்வேறு நாடுக‌ளில் உல‌வும் குழ‌ந்தைக‌ள் க‌தையை ந‌ம் குழ‌ந்தைக‌ளுக்கு மொழிமாற்ற‌ம் செய்து கிடைக்க‌ச் செய்ய‌வேண்டும் என்ப‌துதான் அது!


என் ம‌ன‌ உந்துத‌லுக்கு கொரிய‌ நாட்டில் குழ‌ந்தைக‌ள் உல‌கில் வெற்றிக்க‌தையாக‌ உலாவ‌ரும் கொரியன் சிண்ட்ரெல்லாவை ந‌ம் த‌மிழ் குழ‌ந்தைக‌ளுக்கு வ‌ழ‌ங்கும்


என் சிறு முய‌ல்வு இது!

த‌மிழ் சிஃபி இணைய‌ இத‌ழ் ஆசிரிய‌ர் ந‌ண்ப‌ர் அண்ணா க‌ண்ண‌ன் அவ‌ர்க‌ள்http://sify.com/tamil/art/fullstory.php?id=14843745

குடிய‌ர‌சு தின‌ சிற‌ப்பித‌ழிலிருந்து இந்த‌க் கொரிய‌ச் சிறுக‌தையை தொட‌ராக‌ வெளியிடுகிறார்க‌ள். அவ‌ருக்கு என் க‌னிவான‌ ந‌ன்றிக‌ளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.




-ஆல்பர்ட்,
விஸ்கான்சின்,
அமெரிக்கா.